ஓராண்டுகால நடைமுறையில் வரியைத் திரும்பப் பெறும் கொள்கையின் சாதனை

Estimated read time 0 min read

தேசிய அளவில் குறிப்பிட்ட கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு வெளிநாட்டுப் பயணிகள் செலுத்திய வரியை நேரடியாக அங்கேயே திரும்ப பெற்றுக் கொள்ளும் கொள்கையை சீனா 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்தது. தற்போது வரை சீராக நடைமுறைப்படுத்தப்படும் இக்கொள்கை குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனத் தேசிய வரி விதிப்பு பணியகம் ஏப்ரல் 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 12 மாதங்களில் தேசிய அளவில் இக்கொள்கையை அனுபவித்துள்ள மக்களின் எண்ணிக்கை 12.96 மடங்கு அதிகரித்துள்ளது. வரியைத் திரும்பப் பெறக்கூடிய பொருட்களின் விற்பனை தொகையும் திருப்பி அளிக்கப்பட்ட வரி தொகையும் தலா 9.35 மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது சீனாவில் வெளிநாட்டுப் பயணிகள் வணிகப் பொருட்களுக்கு செலுத்திய வரியை நேரடியாக திரும்பப் பெறக்கூடிய சேவை வழங்கும் கடைகளின் எண்ணிக்கை 8000க்கும் மேலாகும். இந்நடவடிக்கை தேசிய அளவில் அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்தில் இருந்ததை விட இத்தகைய கடைகளின் அதிகரிப்பு விகிதம் 100 விழுக்காட்டுக்கும் மேலாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author