சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, நவம்பர் 30ம் நாள், செங் து நகரில், சீன-மத்திய ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் 5வது கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு வருகை தந்த துர்க்மேனிஸ்தான் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான மேரேடோவ், கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குலுபயேவ் ஆகியோரை முறையே சந்தித்துரையாடினார்.
மேரேடோவுடனான சந்திப்பில், துர்க்மேனிஸ்தானுடன் இணைந்து வர்த்தக முதலீடு மற்றும் ஒத்துழைப்பின் அளவை மேலும் உயர்த்த சீனா, விரும்புகிறது என்று வாங்யீ குறிப்பிட்டார்.
சீனாவுடன் நிரந்தர நட்பு முறையில் பழகி, நெருங்கிய உயர்நிலை தொடர்பை நிலைநிறுத்த விரும்புகிறது என்று மேரேடோவ் கூறினார்.
குலுபயேவுடன் சந்திப்பில், புதிய யுகத்தில் சீன-கிர்கிஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னெடுக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
சீனாவுடன் வர்த்தகம், முதலீடு, சுங்கத் துறை, நுழைவாயில் முதலிய பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும் என்று குலுபயேவ் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.