“செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி ஒன்றிணைப்புக்கான”சிறப்புச் செயல் நடைமுறையாக்கம் பற்றிய கருத்துக்களைச் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனாவின் இணையவெளி நிர்வாக அலுவலகம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் உள்ளிட்ட 8 வாரியங்கள் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டன. இதில், 2027ஆம் ஆண்டுக்குள், சீனாவின் செயற்கை நுண்ணறிவுக்கான முக்கியத் தொழில் நுட்பம் சார்ந்த பாதுகாப்பான, நிதானமான வினியோகம் நனவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழில் துறையின் வளர்ச்சி அளவும் மற்ற துறைகளுடன் ஒன்றிணையும் நிலையும் உலகளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தித் துறையை ஆழமாக ஒன்றிணைப்பது என்பது புதிய ரக உற்பத்தி ஆற்றலை வளர்த்து, நவீனமயமாக்கத் தொழில் துறை கட்டமைப்பைக் கட்டியமைப்பதற்குரிய முக்கிய வழியாகும். உற்பத்தித் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஒன்றிணைவதை முன்னேற்றி, புதிய ரக உற்பத்தி ஆற்றலை உருவாக்கி, பன்முகங்களிலும், ஆழமாகவும், உயர் நிலையுடனும் புதிய ரகத் தொழில் துறைமயமாக்கத்தை கட்டியமைக்க வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
