139வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கண்காட்சி வெளிநாட்டுக் கொள் முதலாளிகளின் எண்ணிக்கை புதிய சாதனை

Estimated read time 0 min read

139வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கண்காட்சியின் முதலாவது கட்ட நேரடி கண்காட்சி ஏப்ரல் 19ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் 19ஆம் நாள் மாலை 5 மணி வரை, 216 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 67 ஆயிரம் வெளிநாட்டுக் கொள் முதலாளிகள் கலந்துகொண்டனர். இது முந்தைய கண்காட்சியை விட 5.9 சதவீதம் அதிகமாகும். இதில் கலந்துகொண்ட கொள் முதலாளிகளின் எண்ணிக்கை புதிய சாதனையை எட்டி, சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் நெகிழ்வையும் உயிராற்றலையும் முழுமையாக வெளிக்காட்டியது.

மேம்பட்ட உற்பத்தி என்ற கருப்பொருளைக் கொண்ட முதல் கட்ட கண்காட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

நடப்பு ஆண்டுக்கான கண்காட்சி குவாங்சோ நகரில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட கண்காட்சி தரமுள்ள வீட்டு அலங்காரப் பொருட்கள் என்ற கருப்பொருளில் நடத்தப்பட உள்ளது.

You May Also Like

More From Author