சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவருமான ஷி ச்சின்பிங், கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில், நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சீனாவின் நவீனமயமாக்கலின் புதிய பயணத்தில், உழைக்கும் மக்கள் கட்சியைச் சுற்றி நெருக்கமாக ஒன்றிணைந்து, கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர் என்றார். மேலும், உயர்தர பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும், அனைத்து நிலைகளிலும் உள்ள கட்சிக் கமிட்டிகளும் அரசுகளும் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் உண்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
