உலகக் கால்பந்து போட்டி அண்மையில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகளவில் மிகவும் வரவேற்கப்படும் உலகக் கால்பந்து கோப்பை தொடர்புடைய நினைவுப் பொருட்களில் சுமார் 70 விழுக்காட்டுப் பகுதிப் பொருட்கள் சீனாவின் யீவூ சந்தையிலிருந்தே உலகம் முழுவதும் சென்றடைகின்றன.
கடந்த 40 ஆண்டுகாலத்திற்கு முன்பாக வறுமையில் சிக்கியிருந்த சின்ன நகரம் என்னும் நிலையில் இருந்து தற்போது உலக வங்கியினால் அங்கீகலிக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய சிறு வணிகப் பொருட்களின் சந்தையாக யீ வூ மாறியுள்ளது.
யீ வூ நகரம் குவாங் சியோ லியன் அம்மையாருக்குச் சொந்த ஊராகும். திரைசீலை மற்றும் மேடைத் துணி போன்ற உற்பத்தி பொருட்களை அவர் கடந்த 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றார். அவரது மகன், புதிய ரக நுண்மதி உற்பத்தி பொருட்கள் கடை ஒன்றை நடத்தி வருகி்றார். தற்போது யீ வூ சந்தையில், உங்களுடைய கற்பனைக்குள்ளான எல்லா வகைப் பொருட்களையும் வாங்க முடியும்.
2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் நிலவரப்படி யீவூ சந்தையில் வணிகம் செய்யும் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 12 இலட்சத்து 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கிலிருந்து வணிகப் பொருட்கள் சுமார் 230க்கும் மேலான நாடுகள் மற்றும் பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இச்சந்தையில் நாளொன்றுக்குச் சராசரியாக 3 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் 26 ஆயிரம் விரைவு அஞ்சல் பெட்டிகள் உலக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒரு கடைக்கு குறைந்தது 3 நிமிடங்கள் என்ற கணக்கில் நாளுக்கு 8 மணி நேரம் என்ற அளவில் இங்குள்ள 80 ஆயிரம் கடைகளையும் சுற்றிப் பார்க்க வேண்டுமானாலும் கூட, 16 திங்கள் காலம் தேவை.
யீ வூ நகரின் ச்சிமிங் சான் குடியிருப்பு இடம், ஒரு பன்னாட்டு குடியிருப்பு பகுதியாக அழைக்கப்படுகிறது. இதில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேரில் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1400 வெளிநாட்டவர் வசிக்கின்றனர். யீவூ நகரம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நகரமாகும். பேரார்வம் கொண்டவர்கள் தத்தமது இலட்சியத்தை நாடுவதற்கு இந்நகரம் உகந்தது என்று இங்கு வாழ்கின்ற வெளிநாட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
