மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணி அதிரடி காட்டி வருவதால் மம்தா பானர்ஜியின் கோட்டை ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஆரம்பகட்ட நிலவரப்படி பாஜக 91 இடங்களில் முன்னிலை பெற்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை (79 இடங்கள்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த முறை கிங் மேக்கராக இருந்த இடதுசாரி கூட்டணி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெற முடியாமல் பூஜ்யத்தில் நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கும் சூழலில், வங்காள மண்ணில் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மம்தாவை வீழ்த்தி பாஜக அரியணையை ஏறுமா அல்லது ‘தீதி’ மீண்டும் மேஜிக் செய்வாரா என்ற பரபரப்பு இந்திய அரசியலையே உலுக்கி வருகிறது.
