சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லே ஜிங் டெ அண்மையில், அமெரிக்க எல்லை கடந்த பயணம் மேற்கொண்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், அமெரிக்காவுக்கும் தைவானுக்குமிடையில் எந்த வித அதிகாரப்பூர்வத் தொடர்பையும், தைவான் அதிகார வட்டாரத்தின் தலைவர், எந்த பெயரிலும் எந்த சாக்குபோக்கிலும் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணத்தையும், தைவான் சுதந்திர பிரிவினையாளர்கள் மற்றும் அவர்களின் செயல்களுக்கு அமெரிக்கா எந்த முறையிலும் அளித்த ஆதரவையும், சீனா உறுதியாக எதிர்க்கிறது.
லே ஜிங் டெ, அமெரிக்க எல்லையைக் கடந்த பயணத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவிடம் கடும் எதிர்ப்பு சீனா தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
தைவான் பிரச்சினை, சீனாவின் மைய பிரச்சினைகளில் மையமாகும். அமெரிக்க தரப்பு, ஒரே சீனா கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளைப் பின்பற்றி, தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்காது என்று அமெரிக்க தலைவர் வழங்கிய வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டும். தேசிய இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க, சீனா வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.