தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுடி மேற்கு, வடமேற்காக நகர்ந்து 48 மணிநேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 58% கூடுதலாகவும், சென்னையில் இயல்பை விட 23% கூடுதலாகவும் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
