மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகளை அகற்றுதல் மற்றும் தண்டவாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பெய்துவரும் மழையால் சிறுசிறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31 வரை ரயில் சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், ஊட்டியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.