தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு ‘சென்டம்’ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது.
குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் தான் இந்த முறை நிஜமான ‘சென்சேஷன்’. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 6,945 மாணவர்கள் கணிணி அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 எடுத்து ஸ்கோர் போர்டை அதிர வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப்பதிவியல் (Accountancy) பாடத்தில் 1,946 பேரும் நூற்றுக்கு நூறு வாங்கி சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கணிதத்தில் இந்த முறை 732 பேர் சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் சென்டம் வாங்கிய ‘சிங்கிள் சப்ஜெக்ட்’ கில்லிகளின் எண்ணிக்கை மட்டும் 16,024-ஆக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு ரிசல்ட், மாணவர்கள் டெக்னாலஜி பாடங்களில் செம ஷார்ப்பாக இருப்பதை பறைசாற்றுகிறது!
