தமிழக அரசியலில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்கிற ‘திக் திக்’ நிமிடங்கள் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 7) நடத்திய ரகசிய ஆலோசனை கோட்டை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“அதிமுக-வுக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது, பொறுமையா இருங்க.. கூடிய சீக்கிரம் நல்லதே நடக்கும்” என இபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை, அதிமுக கூடாரத்தையே உற்சாகத்தில் துள்ள குதிப்பதாக ஆக்கியுள்ளது. ஒரு பக்கம் திமுகவின் அதிரடி முடிவுகள், மறுபக்கம் தவெக-வின் இழுபறி எனச் சூழல் சூடாக இருக்க, “யாரும் அசந்துடாதீங்க, விழிப்புணர்வோடும் ஒற்றுமையோடும் இருக்கணும்” என எடப்பாடியார் செம ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர் போட்டுள்ளாராம். இதைப் பார்த்தால், தமிழக அரசியலில் அதிமுக ஒரு ‘மெகா’ ப்ளானோடு களமிறங்கப்போவது மட்டும் உறுதி எனத் தெரிகிறது.
