ஜெர்மனி மிக பெரிய வணிக வங்கியான டாச்சுயி வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஆண்டை விட, நிலைமை சீராக மாறியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்ட சீன நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
சீன அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் இரு திங்களில், சீனாவில் மொத்த சில்லறை தொகை 8 இலட்சத்து 37 ஆயிரத்து 310 கோடி யுவானாகும். முன்பு மதிப்பீட்டை விட இத்தொகை பெருமளவாக தாண்டியுள்ளது.
நுகர்வு செய்ய விரும்பும் சீன நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது, சீனாவில் முதலீடு செய்த அன்னிய நிறுவனங்களுக்குத் துணை புரியும். சீனாவின் புதிய உயர் தர உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு, நுகர்வு சந்தையில் புதிய மாற்றங்கள் தோன்றியுள்ளன. 140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட சீனா, உலகில் மிக பெரிய சந்தைகளில் ஒன்றாகும்.
மேக்கின்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 2030ஆம் ஆண்டில், சீனாவின் நகரவாசிகள், உலகின் 91 விழுக்காடான நுகர்வு அதிகரிப்பை ஏற்படுத்துவர்.
சீனாவின் 700 நகரங்கள், உலகின் நகர நுகர்வு அதிகரிப்புக்கு 7 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை அதிகரிக்கும். நுகர்வு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆற்றலாகும். சீன பொருளாதார வளர்ச்சி வழிமுறை, நுகர்வு சார்ந்ததாக மாறுவது, உலக பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
