காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட “முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்” என்று ஹமாஸ் வியாழனன்று கூறியது.
இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் அவர்கள் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) தாக்குதல்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள போதிலும், தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் சமீபத்திய ஹமாஸ் அறிக்கை வந்தது.
“எங்கள் மக்களின் மீதான ஆக்கிரமிப்பு, முற்றுகை, பட்டினி மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் வெளிச்சத்தில், (போர்நிறுத்த) பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய பிரிவுகள் ஏற்றுக்கொள்ளாது” என்று ஹமாஸ் அறிக்கை கூறுகிறது.