அலைபாயும் மனது

அலைபாயும் மனதினிலே: கவிஞர் இரா. இரவி

மனம் ஒரு குரங்கு என்றனர் அன்று
மனதை அலைபாய விடாமல் வைத்தல் நன்று !

இக்கரைக்கு அக்கரைப் பச்சையாகத் தான் தெரியும்
அக்கரையில் பச்சை இல்லை என்பதை உணர்க!

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக
ஆசையால் உள்ளதை இழப்பதைத் தவிர்ப்போம்!

கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதை விடுத்து
கிடைத்ததை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

விரும்பியது கிடைக்கவில்லையென வருந்ததே
விரும்பிடுக கிடைத்ததில் அன்பு செலுத்துக!

எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிடுங்கள்
எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்!

ஒன்றை விட ஒன்று உயர்ந்ததாகத் தோன்றும்
ஒன்றின் மீது கவனம் இருந்தால் சிறக்கும்!

ஆயிரம் முறை சிந்தித்து நல்ல முடிவெடுங்கள்
ஆனால் முடிவெடுத்தப் பின்னே சிந்திக்க வேண்டாம்!

அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம்
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வோம்!

Please follow and like us:

You May Also Like

More From Author