சீனத் தேசிய பாதுகாப்பு அமைசகத்தின் செய்தித்தொடர்பாளர் சென் சி மூத்த கர்னல் 14ஆம் நாள் பிற்பகல், செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,
81 ஆண்டுகளுக்கு முன்பே, சீனா மற்றும் உலகின் பாசிசவாத எதிர்ப்பு ஆற்றலின் கடுமையான தாக்குதல்களால், ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. போரில் தோல்வியடைந்துள்ள ஜப்பான் வரலாற்று படிப்பினையைப் பெறவில்லை. ஆக்கிரமிப்பு குற்றங்களை வலது சாரி சக்தி திரித்துப்புரட்டி மறுத்துள்ளதை ஜப்பான் நீண்டகாலமாகப் பொருட்படுத்தாமல் செயல்படுத்தி வருகிறது. அண்மையில், வெளிபுற அச்சுறுதல் என்ற சாக்குபோக்கில், ஜப்பான் தற்காப்பு வரவுச் செலவைப் பெரிதும் அதிகரித்து, தாக்குதல் தன்மை வாய்ந்த ஆற்றலைப் பெரிதும் வளர்த்து, இராணுவத் தொழில் துறையைப் பெரிதும் விரிவாக்கி வரும். புதிய இராணுவ வெறியை விழிப்புடன் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
