இயற்கை வனப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக்கான இடைக்கால மற்றும் நீண்டகால வரைவுத் திட்டம் ஒன்றை சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி நிர்வாகம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீன நிதித் துறை அமைச்சகம் முதலிய 6 வாரியங்கள் கூட்டாக வெளியிட்டன.
இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டுக்குள், இயற்கை வன பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு அமைப்புமுறை அடிப்படையாக முழுமைப்படுத்தப்படும். இயற்கை வனப் பரப்பளவு 17 கோடியே 20 இலட்சம் ஹெக்டராக உள்ளது.
இயற்கை வனப் பாதுகாப்பு மற்றும் பொது நல வன மேலாண்மையின் ஒருங்கிணைப்பு, நிதியுதவி கொள்கையின் மேம்பாடு முதலியவை குறித்து சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2035ஆம் ஆண்டுக்குள் இயற்கை வனப் பாதுகாப்புச் சீரமைப்பு அமைப்புமுறை முழுமைப்படுத்தப்படும்
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/微信图片_20250208102910.jpg)