சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீனாவில் 42 ஆயிரத்து 108 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. அந்த காலத்தில் சீனா உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 64 ஆயிரத்து 60 கோடி யுவானை எட்டியது.
சீனாவில் ஆக்கத் தொழில் உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 17 ஆயிரத்து 924 கோடி யுவானை எட்டியது. சேவைத் துறை உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 44 ஆயிரத்து 613 கோடி யுவானை எட்டியது. உயர் தொழில் நுட்ப ஆக்கத் தொழில் உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை, 7 ஆயிரத்து 712 கோடி யுவானை எட்டி, சீனா உண்மையாக பயன்படுத்திய மொத்த அந்நிய முதலீட்டுத் தொகையில் 12 விழுக்காடு வகிக்கிறது.
தவிர, அந்த காலத்தில் ஜெர்மனியும், சிங்கப்பூரும் சீனாவில் செய்த முதலீடு, முறையே 19.3 விழுக்காடும் 11.6 விழுக்காடும் அதிகரித்துள்ளது.