உத்தரபிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் இணையக் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லோக்பவனில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சைபர் காவல் நிலையங்கள் ஏற்கனவே மாநிலத்தின் 18 பிரிவுத் தலைமையகங்களில் உள்ளன. மீதமுள்ள 57 மாவட்டங்களில் காவல் நிலையங்கள் அமைக்க பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
127 கோடியே 24 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த காவல் நிலையங்களை ஐஜி அளவிலான அதிகாரி ஒருவர் கவனித்து வந்தார் என்பது குறிப்படத்தக்கது.