
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரசாந்த், செல்வம் மற்றும் பாலா ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளிகளான இந்த மூவர் மீதும் மாநில சைபர் கிரைம் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சினிமா பைரஸிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி ஆக்ஷன், இணையத்தில் திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடும் கும்பலை நடுங்க வைத்துள்ளது.
