பாரிஸ் ஒலிம்பிக் : இரட்டையர் துப்பாக்கிச்சுடு .. இந்தியா ஏமாற்றம் ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று 14 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 10 மீட்டர் ஏர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவினருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை மற்றும் ரமீதா – பபுதா அர்ஜூன் ஆகிய 2 அணிகள் பங்கேற்று விளையாடியது.

நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு வேரறுக்கும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். அதில் இறுதியாக தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், தகுதி சுற்றில் ரமிதா – பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தைப் பிடித்து நூலிழையில் வெளியேறியது.

அதே போல மற்றொரு அணியான இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளை பெற்று 12-வது இடம் பிடித்து வெளியேறியது. இவர்களை தொடர்ந்து சீனா 632.2 புள்ளிகள் பெற்று முதலிடமும், தென் கொரியா 631.4 பெற்று 2-ஆம் இடமும், கஜகஸ்தான் 630.8 புள்ளிகள் பெற்று 3-வது இடமும், ஜெர்மனி 629.7 புள்ளிகள் பெற்று 4-வது இடமும் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின. அந்த சுற்றில் கஜகஸ்தான் வெண்கலமும், தென் கொரியா வெள்ளியையும், சீனா தங்கத்தையும் வென்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author