மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

Estimated read time 1 min read

டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் லட்சுமி யோஜனா திட்டத்தை முதலமைச்சர் ரேகா குப்தாதொடங்கி வைத்தார்.

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் ‘டெல்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

டெல்லி தல்கத்தோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், சுமார் 4,000 பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், பாஜகவின் 2025 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாகும்.

இதற்கான பதிவு போர்ட்டல் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று மதியம் நிலவரப்படி 9 லட்சத்து 13 ஆயிரத்து 495 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 223 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நேரடி பண பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முதல் தவணை செப்டம்பர் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author