சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஷஸ் தொடருக்கு இணையாகப் பேசப்படும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
2026-27 சர்வதேச உள்நாட்டு சீசனின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த 2022-23 சீசனில் இந்திய மண்ணில் நடைபெற்ற தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், மீண்டும் அதே போன்றதொரு விறுவிறுப்பான மோதலை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி 2027: இந்தியா vs ஆஸ்திரேலியா தொடருக்கான மைதானங்கள் பட்டியல் வெளியீடு
