ரஷ்ய அதிபர் புதினையே கையைப் பிடித்து இழுத்த பத்திரிக்கையாளர்…

Estimated read time 1 min read

உலகின் மிகச் கடுமையான மற்றும் கண்டிப்பான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கையைப் பிடித்து, பெண் ஒருவர் தன் பக்கம் இழுத்த வீடியோ தற்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச மேடைகளில் பெரிய தலைவர்களே புதின் முன்னிலையில் மிகவும் எச்சரிக்கையுடனும், பயபக்தியுடனும் நடந்து கொள்ளும் நிலையில், ரஷியாவில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் இந்த சுவாரசியமான மற்றும் தர்மசங்கடமான தருணம் அரங்கேறியுள்ளது.

ரஷியாவின் கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு அதிபர் புதின் விருதுகளை வழங்கி கௌரவித்து வந்தார். அப்போது, ரஷியாவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், முன்னணி தொழிலதிபருமான டீனா கண்டேலாகி என்பவரது பெயர் அழைக்கப்பட்டது.

மேடைக்கு வந்த டீனாவுக்கு, அதிபர் புதின் பதக்கம் அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, புகைப்படக் கலைஞர்களுக்குப் போஸ் கொடுத்துவிட்டு புதின் அடுத்தவரை நோக்கி நகர முயன்றார். அந்த நொடியில், டீனா திடீரென புதினின் கையைத் தீர்க்கமாகப் பிடித்து, தன் பக்கமாக இழுத்து நிறுத்தினார். மேலும், கேமராக்களைப் பார்த்து புன்னகையுடன் போஸ் கொடுக்கத் தொடங்கினார்.

இந்த எதிர்பாராத செயலால் உலகையே அச்சுறுத்தும் ரஷிய அதிபர் புதின் சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார். அவரது முகம் லேசான தர்மசங்கடத்தால் சிவந்தது. எனினும், நிலைமையைச் சமாளித்த புதின், லேசான புன்னகையுடன் போஸ் கொடுத்தார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மற்ற விஐபிக்களும் இந்த செயலைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

ரஷிய ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பெண்களில் ஒருவராக டீனா கருதப்படுகிறார். ஜார்ஜியா நாட்டில் பிறந்த இவர், ரஷிய கலாச்சாரத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். ரஷியாவின் பிரபல விளையாட்டு சேனலான ‘மேட்ச் டிவி’-யின் பொதுத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இவர், தற்போது ரஷியாவின் பிரம்மாண்ட ஊடகக் குழுமமான ‘காஸ்ப்ரோம்-மீடியா’வின் துணைப் பொது இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.

அதிபர் புதினின் தீவிர ஆதரவாளரான டீனா, உக்ரைன் போரின் போது ரஷிய அரசுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தவர். இதன் காரணமாகப் பல மேற்கத்திய நாடுகள் இவர் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது புதினின் கையைப் பிடித்து அவர் இழுத்த இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் படுவேகமாகப் பரவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author