“ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது” – விஷால்

Estimated read time 1 min read

லைகா நிறுவனத்திற்குச் சேர வேண்டிய பணத்தை உடனடியாகச் செட்டில் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இதுவரை மதிக்காமல் ‘டிமிக்கி’ கொடுத்து வரும் நடிகர் விஷால், தற்போது தவெக தலைவர் முதல்வர் விஜய்க்கு நீண்ட நெடிய அரசியல் அட்வைஸ் வழங்கி இருப்பதை நெட்டிசன்கள் பயங்கரமாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

முப்பதாண்டுகளாகத் திரையுலகில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த முதல்வர் விஜய்யே இந்தத் துறையைத் தன் வசம் வைத்திருக்காமல், எந்தவொரு சினிமா அனுபவமும் இல்லாத, அண்மையில் போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ்மோகனிடம் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமா சட்டத்துறையை ஒப்படைத்திருப்பது ரத்தக் கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றமே என்று விஷால் எக்ஸ் தளத்தில் புலம்பியுள்ளார்.

அதோடு நிறுத்தாமல், அரசு இ-டிக்கெட் வசதி, ‘ஒரே இந்தியா ஒரே வரி’ கொள்கைக்கு முரணான உள்ளாட்சி அமைப்புகளின் கூடுதல் வரியை ரத்து செய்வது மற்றும் சிறு படங்களுக்கான மானியத்தை உயர்த்துவது போன்ற தங்களின் ஒன்பது ஆண்டுகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள விஷால், அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? 30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதலமைச்சர் விஜயிடம் இருப்பது சரியாக இருக்குமா? அமைச்சர் ராஜ்மோகனை சிறுமைப்படுத்தும் நோக்கில் இதனை சொல்லவில்லை. இது என்னுடைய கருத்து மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author