வறுமையிலிருந்து விடுபட்ட பிரதேங்களில் சீனாவின் நிரந்தர ஆதரவுப் பணி

Estimated read time 1 min read

இவ்வாண்டு முதல், வறுமையிலிருந்து விடுபட்ட பிரதேங்களில் சீனா நிரந்தர ஆதரவுப் பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. தொடர்புடைய வாரியங்களில் நிரந்தர ஆதரவுப் பணிக்கான கொள்கை அமைப்பு முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, வளர்ச்சி சார்ந்த ஆதரவுப் பணியை முக்கியமாகக் கொண்டு வறுமையிலிருந்து விடுபட்ட பிரதேங்களின் சொந்தமான உந்து ஆற்றலை வலுப்படுத்துவதை முன்னேற்றி வருவதாக சீன வேளாண் மற்றும் கிராமப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழில்துறை ரீதியில் 17ஆயிரத்து 700கோடி யுவானான நிரந்தர ஆதரவு நிதியை மத்திய நிதித் துறை ஏற்பாடு செய்துள்ளது. வேலை வாய்ப்புக்கான ஆதரவில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உழைப்பாற்றல் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கி வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் அதிகரிப்பின் வழிமுறைகளைச் சீனா விரிவாக்கி வருகிறது. வறுமையிலிருந்து விடுபட்டவர்களின் வேலை வாய்ப்பு அளவு 3கோடிக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author