இலங்கையில் நெல் விளைச்சலை அதிகரிப்பது, விவசாய மேம்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ‘சீனா உதவிப் பயிற்சி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலங்கைக் கிளையின் அனுபவப் பகிர்வுப் பயிலரங்கு 17ஆம் நாள் கொழும்பில் நடைபெற்றது.
“இலங்கை நெல் விளைச்சல் அதிகரிப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் இலங்கையின் விவசாய அமைச்சகம் இணைந்து செய்திருந்தன. இப்பயிலரங்கின்போது, அதிக விளைச்சல் தரும் நெல் வகைகள், நீர்வள மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, இயந்திரமயமாக்கல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் சீனாவில் தாங்கள் கற்றுக்கொண்ட நுட்பங்களையும் நடைமுறைகளையும் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பயிற்சியாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.
