‘கருப்பு’ பட விவகாரம்: இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையான இசைஞானி இளையராஜாவின் பெயர் மற்றும் காட்சி தங்களது ‘கருப்பு’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக ஊடக வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ‘கருப்பு’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்திய காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், “அவரைப் புண்படுத்தும் உள்நோக்கம் எங்களுக்குச் சிறிதளவும் இல்லை; இதனால் அவரது ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் எங்களது தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தயாரிப்பு நிறுவனமானம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author