உலகின் பாலின சமத்துவம் மற்றும் மகளிர் இலட்சியவளர்ச்சி முன்னெடுப்பை இலக்காகக் கொண்ட உலக மகளிர் உச்சிமாநாடு அக்டோபர் 13
மற்றும் 14ம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங்கில்
நடைபெற்றிருந்த 4வது உலக மகளிர் மாநாட்டில், மகளிர் உரிமை, மனித உரிமையாகும் என்ற
கருத்துடன், மகளிர் வறுமை ஒழிப்பு, கல்வி உரிமை உத்தரவாதம் முதலிய 12 அம்சங்கள்,
உலகின் முன்னுரிமை பிரச்சினைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில்,
சீனாவில் 69 கோடி பெண்கள் குறிப்பிட்ட வசதியான வாழ்க்கையை வாழ்கின்றனர். உயர்நிலை
கல்லூரியில் மாணவிகளின் எண்ணிக்கை பாதியளவைத் தாண்டியுள்ளது. சீன மகளிரின் சராசரி
ஆயுள்காலம் 80 வயதைத் தாண்டியுள்ளது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள், நடைமுறையில்
சீனா படைத்துள்ள ஒரு பகுதி முன்னேற்றங்கள் ஆகும்.
2015ம் ஆண்டிலும் 2020ம் ஆண்டிலும் ஐ.நா மகளிர்
அலுவலகத்துக்கு சீனா 2 முறை 1 கோடி டாலர் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. சீன அரசுத்
தலைவர் ஷிச்சின்பிங் 2015ம் ஆண்டின் உலக மகளிர் உச்சிமாநாட்டில், வளரும் நாடுகளில்
100 மகளிர் மற்றும் குழந்தை சுகாதாரத் திட்டப்பணிகள், வளரும் நாடுகளுக்கு 1
இலட்சம் சிறப்பு பெண் தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பது முதலிய முன்மொழிவுகளை
முன்வைத்தார். இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்ற வரும் உலக மகளிர்
உச்சிமாநாட்டில் பங்கெடுத்த பல்வேறு தரப்புகள், உலகின் பாலின சமத்துவம் மற்றும்
மகளிரின் முழு வளர்ச்சிக்குப் புதிய உந்து சக்தியை ஊட்ட வேண்டும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.