மகளிர் ஐபிஎல் (WPL) நான்காவது சீசன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இன்று (நவம்பர் 27) நடந்த மெகா ஏலத்தின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் இந்திய ஆண்கள் டி20 உலகக்கோப்பை காரணமாக, வழக்கமாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரானது, இம்முறை குறுகிய காலத்திற்கு முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
