சீன-ரஷிய கல்வி ஆண்டின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் மற்றும் புத்தின் பங்கேற்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய கல்வி ஆண்டுக்கான துவக்க விழாவில் பங்கேற்றார்.

அதில் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில், இவ்வாண்டு சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய நட்பு அண்டை நாட்டு ஒத்துழைப்பு உடன்படிக்கை கையொப்பமிட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் திகழ்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாண்டில் சீன-ரஷிய கல்வி ஆண்டைத் துவங்கியது நானும் புதினும் இரு நாட்டுறவின் நீண்டகால வளர்ச்சிக்கு முன்னோக்கி எடுத்த நெடுநோக்கு ஏற்பாடாகும். திறமைசாலிகளின் பயிற்றுவிப்பதற்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஆழமாக்க வேண்டும். நாகரிக தலைமுறை தொடர்ச்சி, கல்வித் துறையிலுள்ள நிர்வாக அனுபவங்களின் பரிமாற்றம் ஆகிவற்றை முன்னேற்ற வேண்டும். பாரம்பரிய நட்புறவைத் தொடர வேண்டும். இரு தரப்பின் கூட்டு முயற்சியில் சீன-ரஷிய கல்வி ஆண்டு இனிதே நிறைவு பெறுவது உறுதி என நம்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார். 

You May Also Like

More From Author