செர்பியா அரசுத் தலைவர் வுச்சிச் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, பண்பாடு பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வளர்ச்சிகள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கடிதங்கள் எனும் 2 சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்கான துவக்க விழா மே 20ஆம் நாள் பெல்கிரேட்டில் நடைபெற்றது. இந்த 2 நிகழ்ச்சிகள் சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்டன.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பது மற்றும் 4 முக்கிய உலக முன்மொழிவுகளை முன்வைத்தார். அவை உலக வளர்ச்சிக்கு அருமையான வரைபடத்தை உருவாக்கின என்று துவக்க விழாவில் பங்கேற்ற சீன மற்றும் செர்பிய விருந்தினர்கள் தெரிவித்தனர்.
