சீனாவின் ஷென்சோ-23 எனும் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கலம் மே 24ஆம் நாளிரவு 11:08 மணிக்கு ஏவப்பட உள்ளது என்று ஜியூசுவன் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் மே 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தகவல் வெளியானது.
இந்த விண்வெளிப் பயணக் குழுவில் ஜு யாங்ஜு, ஜாங் ஜியுவான், லீ ஜியாயிங் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்களில் ஒருவர் சுற்றுவட்டப் பாதையில் ஓராண்டுகாலம் வரை தங்குதல் சோதனையை மேற்கொள்ள உள்ளார். ஜாங் ஜியுவான், லீ ஜியாயிங் ஆகியோர் விண்வெளி பயணக் கடமையை மேற்கொள்வது இதுவே முதன்முறை. மேலும், வீரங்கனை லீ ஜியாயிங், நடப்பு கடமைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முன், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் காவல் துறையில் பணிபுரிந்தார்.
நடப்பு கடமை, விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி கட்டத்தில் 7ஆவது மனிதர் பயணக் கடமையாகவும், மனிதர்களை ஏற்றிச்செல்லும் 40ஆவது விண்வெளி பயணக் கடமையாகவும் திகழ்கிறது. தற்போது அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன.
