இந்திய பங்குச்சந்தையில் ராக்கெட் வேக உயர்வு! சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் பாய்ச்சல்  

Estimated read time 0 min read

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று (மே 25) வர்த்தக துவக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ராக்கெட் வேக உயர்வைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் உள்நாட்டுச் சந்தையின் பலம் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் பலத்த ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
காலை 9:40 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 759.54 புள்ளிகள் உயர்ந்து 76,176.21 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 217 புள்ளிகள் அதிகரித்து 23,934.76 என்ற அளவிலும் வலுவான நிலையில் வர்த்தகமாகின.

You May Also Like

More From Author