சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஏஐ துறையில் சீனாவுக்கும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
சீனாவின் திறந்த மூல மாதிரியானது, ஏஐ பயன்பாட்டிற்கான கட்டுப்பாட்டையும் செலவையும் பெரியளவில் குறைத்து, அனைத்துத் தரப்புகளும், குறிப்பாக வளரும் நாடுகளும் ஏஐ வளர்ச்சியில் சமமான முறையில் பயனடைய உதவுகிறது என்று தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு உலக ஏஐ மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்மட்டக் கூட்டத்தை சீனா ஷாங்காய் மாநகரில் நடத்த உள்ளது. இம்மாநாட்டை வாய்ப்பாகக் கொண்டு, தொழில்நுட்பப் புத்தாக்கத்தை விவாதிக்கவும், சாதனைகளின் பயன்பாட்டை மேம்படுத்தவும், உள்ளடக்கிய சூழலமைப்பை உருவாக்கவும், ஏஐயின் பயனுள்ள மற்றும் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உலகளாவிய ஏஐ வளர்ச்சியில் புதிய இயக்காற்றலை வழங்கவும், அனைத்து தரப்புகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
