கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர திருப்புமுனையாக, இந்தியாவும், கனடாவும் இருநாட்டு தலைநகரங்களில் உயர் ஸ்தானிகர்களை மீண்டும் அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிர்வாகத்தின் கீழ் இருநாட்டின் உறவுகளும் முறிந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,”இந்த மிக முக்கியமான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அளவீடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க பிரதமர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் முதலாவது, தலைநகரங்களில் உயர் ஸ்தானிகர்களை விரைவில் மீட்டெடுப்பதாகும்” என்று கூறினார்.
இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்
