வாங்யீயும் அன்டோனியோகுட்ரேஸும் சந்திப்பு

Estimated read time 0 min read

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸும் உள்ளூர் நேரப்படி மே 26ஆம் நாள் சந்திப்பு நடத்தினர்.

அப்போது, குட்ரேஸிடம் மீதான சீனத் தலைவர்களின் வணக்கத்தை வாங்யீ தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இவ்வாண்டு, ஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் சட்டப்பூர்வத் தகுநிலை மீட்கப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும். சீனா, பலதரப்புவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்புமுறையை உறுதியுடன் பேணிக்காத்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு மேலும் வலிமையான இயக்காற்றலை ஊட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.

குட்ரேஸ் கூறுகையில், சீனா, தொடரவல்ல வளர்ச்சிக்கான மிக நம்பகமான கூட்டாளியாகவும், ஐ.நாவின் அமைதி காப்பு நடவடிக்கையில் ஆக்கமுடன் பங்கேற்ற நாடாகவும் திகழ்கிறது. பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சீனா முன்வைத்த உலகளாவிய முன்மொழிவுகளை ஐ.நா பாராட்டியதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author