2025ஆம் ஆண்டு சீனக் கடல் வளர்ச்சி குறியீட்டு அறிக்கையை சீனத் தேசிய கடல் தகவல் மையமும், சீனக் கடல் வளர்ச்சி ஆய்வகமும் செப்டம்பர் 8ஆம் நாள் வெளியிட்டன. 2024ஆம் ஆண்டு சீனக் கடல் வளர்ச்சி குறியீடு 129.7 ஆக இருந்தது. இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனாவின் கடல் வல்லரசு கட்டுமானம் சீராக முன்னேறி வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின்படி, சீனக் கடல் பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. கடல் துறையில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. உயிரின வாழ்க்கை சூழல் மேம்பட்டு வருகின்றது. மூலவளங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு திறன் மேலும் உயர்ந்துள்ளது. உயர் நிலையுடைய வெளிநாட்டுத் திறப்பில் புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கடல் துறையின் பன்னோக்க மேலாண்மை நிலை நிதானமாக உயர்ந்து வருகிறது.