2000ஆம் ஆண்டில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் நிறுவப்பட்டதிலிருந்து, சீனா ஆப்பிரிக்கா இடையேயான வர்த்தக மதிப்பு பலமுறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சீனச் சுங்க துறை தலைமை பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 16ஆண்டுகளாக ஆப்பிரிக்காவுக்கான முதல் பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக சீனா திகழ்கின்றது என்றும், 2024ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆப்பிரிக்க வர்த்தக மதிப்பு முதன்முறையாக 2இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, 2இலட்சத்து 10ஆயிரம் கோடி யுவானாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், ஆப்பிரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 96321கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 12.4விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.
இதில், வேளாண்மை ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலைமையில், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கு இடையே வேளாண்மை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 7000கோடி யுவானை முதன்முறையாக தாண்டியது. உள்கட்டமைப்பு கட்டுமான ஒத்துழைப்புத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், ஆப்பிரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் கப்பல் மற்றும் கடல் சார் பொறியியல் சாதனங்கள், பொறியியல் இயங்கிரங்கள், மின்சார மோட்டர்கள் மற்றும் டைனமோக்களின் அளவு முறையே 41.6, 58.5 மற்றும் 51.1விழுக்காடு அதிகரித்து காணப்பட்டன என்று கணக்கிடப்பட்டது.