ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் ஜெர்மன்-சீன நிறுவனங்களிடை ஒத்துழைப்பு மனதில் பதிந்துள்ளது: ஜென்மனி தலைமையமைச்சர்

ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில், ஜெர்மனி மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார்.

இரு நாடுகளின் நட்புறவுப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து ஆழப்படுத்தி இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல ஜெர்மனி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்று காலை, ஷோல்ஸ் விமானம் மூலம் சொங்ச்சிங்கை வந்தடைந்து தனது சீனப் பயணத்தைத் தொடங்கினார்.

அதே நாளில், சீன-ஜெர்மனி கூட்டு முதலீட்டு நிறுவனங்கள், சீன-ஜெர்மனி நீர் கண்காணிப்பு திட்டம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பரிமாற்றங்களை மேற்கொண்டார்.

You May Also Like

More From Author