ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சீனாவுக்கு வந்துள்ள பப்புவா நியூ கினியாவின் தலைமையமைச்சர் ஜேம்ஸ் மாரபேவுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் ஷென்சென் மாநகரில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சீனா எப்போதுமே பப்புவா நியூ கினியாவை நம்பகமான நண்பராகவும் கூட்டாளியாகவும் கருதுகிறது என்றும், அந்நாடு தனது சொந்த தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சி பாதையை சுதந்திரமாக ஆராய்வதற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி அனுபவம் குறித்து பரிமாற்றங்களை அதிகரிக்கவும், உத்திப்பூர்வ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பப்புவா நியூ கினியாவுடன் பணியாற்ற சீனா விரும்புகிறது. பலதரப்பு நிகழ்வுகளில் இருதரப்பின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் பொது நலன்களைப் பாதுகாக்கவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
