தமிழகத்தில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமாரும்,திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக வந்தனா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மதுபாலன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பிரியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆனந்த்மோகன், மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியராக ஆர்.வைத்தியநாதன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சரவணன், வேலூர் மாவட்ட ஆட்சியராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ரேவதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக வீரப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
