பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு – கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர்..!

Estimated read time 1 min read

கேரளா சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. வந்தே மாதரம் பாடலுடன் சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. அதன்பிறகு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கொள்கை உரையாற்றினார்.

கவர்னரின் கொள்கை உரைக்கு முன்பு வந்தே மாதரம் பாடலின் முதல் பகுதியை காவல்துறை இசைக்குழு இசைத்தது. ஆனால் அந்த த பாடல் முழுவதுமாக இசைக்கப்படவில்லை.

இதையடுத்து கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கொள்கை அம்சங்கள் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் வருமாறு:-

மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு 3 நாட்கள் வரை இருக்கும். மாதவிடாய் விடுப்புக்கு பதிலாக மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் பெண் துறைகளில் ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு கட்டாயமாக்கப்படும். நிலப்பிரச்சினைகளை

தீர்ப்பதற்கு தனி ஆணையம் அமைக்கப்படும். நில உரிமை பத்திர வினியோகம் மேலும் திறமையானதாக மாற்றப்படும்.

நான்கு வழிச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உள்நாட்டு மீன் பிடித்தல் ஊக்குவிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையின் பெயர் எதிர்கால தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும்.

கூட்டுறவு துறையில் நடைபெறும் மோசடியில் கடுமையாக கையாளப்படும். மலிவு விலையில் சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கம். இதனால் சுகாதார துறை மேம்படுத்தப்பட்டு நவீன அமைப்பு உறுதி செய்யப்படும். போதை, பொருள் இல்லா கேரளாவிற்கான சிறப்பு திட்டம் போதை பொருள் மாபியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் வக்பு வாரியம் சீரமைக்கப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author