தமிழ் திரையுலகில் ஸ்போர்ட்ஸ்-காமெடி திரைப்படங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்த ‘சென்னை 600028’ திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ தயாரிப்புப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இதன் முதல் பாகம் சென்னையிலும், அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகம் கிராமத்து பின்னணியிலும் அமைந்திருந்தது.
இந்த வரிசையில், தற்போது உருவாகவிருக்கும் மூன்றாம் பாகமானது இந்திய எல்லையை கடந்து சர்வதேச அளவில் தாய்லாந்தில் படமாக்கப்படவுள்ளது.
இணையத்தில் கசிந்துள்ள இந்த செய்தியை படித்ததும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை 28 பார்ட் 3: தாய்லாந்தில் லொகேஷன் தேடும் வெங்கட் பிரபு
