சேலத்தில் விஜய் நிகழ்ச்சி- 20 பேர் மீது வழக்குப்பதிவு

Estimated read time 0 min read

சேலத்தில் விஜய் நிகழ்ச்சியின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஓமலூர் தவெக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சீலநாயக்கன்பட்டி அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளி உருக்கும் தொழிலாளி சுராஜ் என்பவர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சேலத்தில் விஜய் நிகழ்ச்சியின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஓமலூர் தவெக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டநெரிசலை ஏற்படுத்தியதாகவும் பொதுமக்களின் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You May Also Like

More From Author