தென் சீனக் கடல் பாதுகாப்புக்கான வட்ட மேசை உரையாடல் ஜூலை 13ஆம் நாள் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பு தொடர்பான அவதூறு பேச்சுக்களைச் சீனாவும் இவ்வுரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகளும் மீண்டும் மறுத்துரைத்தனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியேன் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இதனுடன் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் பிரதிநிதி இவ்வட்ட மேசை உரையாடலில் குறிப்பிட்டதைப் போல தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பு சட்டத்தின் சாக்குபோக்கில் நடந்த அரசியல் கேலிக்கூத்து ஆகும். 10ஆண்டுகளுக்கு முன்பு, நடுவர் தீர்ப்பு அவை அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு சட்டத்தைப் பொருட்படுத்தாமல் அளித்த சட்டவிரோதமான செல்லாத தீர்ப்பு அதுவாகும் என்று லின்ஜியேன் தெரிவித்தார்.
தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பை மீண்டும் மறுத்துரைத்த சீனா
You May Also Like
எதிர்காலத்துடன் இணையும் சீன வினியோக சங்கிலி
June 29, 2026
ஊழல் எதிர்ப்பில் கடினமான முயற்சிகள் : சீனா வலியுறுத்தல்
January 6, 2025
