22வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் துவங்கியது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும் ஆசியான் நாடுகளும் பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றுவதில் புதிய சாதனைகளைப் பெற்று வருகின்றன.
சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகலளவில் நடத்திய பொதுமக்கள் கருத்துக் கணிப்பின்படி, சீனாவும் ஆசியான் நாடுகளும் உயர்நிலை திறப்புப் பணியை ஆக்கமுடன் முன்னேற்றி, தாராள வர்த்தக மற்றும் பலதரப்பு வரத்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பற்கான மனவுறுதியை சீன-ஆசியான் பொருட்காட்சி வெளிப்படுத்தியுள்ளது என்று 92.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 தொழில் நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. ஆசியான் நாடுகளுடன் சீனா வர்த்தகத்தை ஆழமாக்குவதற்கான முக்கிய மேடையாக, இந்தப் பொருட்காட்சி மாறியுள்ளது என்று 94.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சீனா, ஆசியான் நாடுகளுடன் பல்வேறு துறைகளின் பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி வருகின்றது. இரு தரப்புகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பு சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. சீனாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பு, இருதரப்புப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் முன்மாதிரியாக விளங்கியது என்று 91.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.