சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லாமியுடன் 22ஆம் நாள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
சீனாவும் பிரிட்டனும், செயற்கை நுண்ணறிவு, அறிவியல் தொழில் நுட்பம், காலநிலை மாற்றச் சமாளிப்பு முதலியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
தற்போது ஒரு சார்பு ஆதிக்க நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ள நிலையில், 2ஆவது உலகப் போருக்கு பின் உருவாக்கப்பட்ட சர்வதேச ஒழுங்குமுறைகளைப் பேணிக்காக்கும் பொறுப்பு இரு தரப்புக்கும் உள்ளது. ஐ.நாவை மையமாக கொண்ட முக்கிய சர்வதேச அமைப்புமுறை, பல தரப்புவாத வர்த்தக அமைப்புமுறை ஆகியவற்றை இரு தரப்பும் பேணிக்காக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
பிரிட்டனும் சீனாவும், உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு முக்கியமாகப் பொறுபேற்கும் நாடுகள் என்று லாமி தெரிவித்தார்.