சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 25ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் துன்கா நாட்டின் மன்னர் 6ஆவது டுபோவைச் சந்தித்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, சீனாவும் துன்காவும் துன்பங்களையும் அறைக்கூவல்களையும் கூட்டாகச் சமாளிக்கும் உண்மையான நண்பர்கள் ஆவர் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். உலகின் பன்னாடுகள் வளர்ச்சியைக் கூட்டாக நாடி அமைதியைப் பகிர்ந்து கொள்வதை முன்னேற்றும் பொருட்டு, 4 உலக முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்துள்ளது.
துன்காவுடன் இணைந்து இந்த முன்மொழிவுகளைக் கூட்டாகச் செயல்படுத்தி இரு நாட்டு மக்களுக்கு மேலும் அருமையான வாழ்க்கையை உருவாக்கச் சீனா விரும்புவதாக அவர் கூறினார்.
சந்திப்புக்குப் பின்பு, இரு நாட்டுத் தலைவர்கள் பொருளாதாரம், மருத்துவச் சிகிச்சை, கல்வி, வளர்ச்சி முதலிய பல துறைகளின் ஒத்துழைப்பு ஆவணங்களின் கையொப்பத்தைப் பார்வையிட்டனர்.
