பீகாரில் மருத்துவமனையில் அதிகாலையில் நேரிட்ட தீ விபத்து: 3 பேர் பலி  

Estimated read time 1 min read

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், ஒட்டுமொத்த ICU-யும் கரும் புகையினாலும், நச்சுப் புகையினாலும் முழுமையாகச் சூழப்பட்டிருந்தது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

Please follow and like us:

You May Also Like

More From Author